பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
86 வயதான அவருக்கு கடந்த நாட்களில் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என்று தெரிவித்து வத்திக்கான் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவருக்கு ‘சில நாட்களுக்கு வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை’ தேவைப்படும் என அதில் குறிப்பட்டுள்ளது.