Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதன்னிச்சையாக கட்டணம் அறவிடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

தன்னிச்சையாக கட்டணம் அறவிடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதால், முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி நேற்று (29) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் முச்சக்கரவண்டிக்கான கட்டணத்தை கிலோமீட்டருக்கு 20 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டத்தை 80 ரூபாவாக நிரணயித்து, மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறி தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles