எரிபொருள் விலை திருத்தத்தை தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணத்தை இன்று முதல் குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று முதல் முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 80 ரூபாவாகவும் கட்டணம் வசூலிக்கப்படும்.