சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்வரும் நாட்களில் கடன் திட்டம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் வொஷிங்டனுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ செல்லும் போது இந்த கலந்துரையாடல்கள் தொடரும் என்று அவர் கூறினார்.