எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஆகக் குறைந்த பேருந்து கட்டணமாக 30 ரூபா அறவிடப்படவுள்ளது.
இந்த விலை குறைப்பு நாளை (30) முதல் அமுலாகும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பேருந்து கட்டணம் தொடர்பான முழுமையான தகவல்கள் நாளை வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.