இன்னும் 12 வருடங்களுக்கு இந்த நாட்டை ஜனாதிபதி ரணிலிடம் ஒப்படைத்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் தொழில் தேடி இலங்கைக்கு வரும் நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஜனாதிபதி ரணிலிடம் ஒப்படைத்தால், நாட்டை விட்டு வெளியேறிய இளைஞர்கள் மீண்டும் நாட்டை வந்தடைவர். உலகில் வாழும் வேலையில்லாத இளைஞர்கள் வேலை தேடி வரும் நாடாக மாறும்.
இவ்வாறானதொரு அமைதியான சூழல் ஏற்படுவதற்கு ஜனாதிபதி எவ்வித தடையுமின்றி தனது கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.