Monday, November 18, 2024
28.3 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை அணிக்கு அபராதம்

இலங்கை அணிக்கு அபராதம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சு தாமதம் காரணமாக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

ஒக்லேண்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மெதுவான ஓவர் வீதத்தை பேணியதற்காக இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியினர், தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் இலக்கை விட ஒரு ஓவர் குறைவாக வீசியிருந்ததாக ஐ.சி.சி போட்டி மத்தியஸ்தர் ஜெஃப் குரோவினால் தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஓவர் வீத குற்றங்கள் தொடர்பான ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான விதி 2.22 இன் படி, தாமதமான ஒவ்வொரு ஓவருக்கும், பந்துவீசத் தவறிய வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக் போட்டி நிபந்தனைகளின் பிரிவு 16.12.2 இன் படி, ஒவ்வொரு தாமதமான ஓவருக்கும் ஒரு புள்ளி குறைக்கப்படுகிறது.

இதன் விளைவாக, சுப்பர் லீக் தொடரின்போது இலங்கை தனது புள்ளிகள் கணக்கில் இருந்து ஒரு புள்ளியை இழக்கும்.

இந்தநிலையில், தாமதமான பந்துவீச்சு வீதத்தை பேணியதாக இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால் முறையான விசாரணைக்கு அவசியமில்லையென சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles