Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரிச்சலுகை வழங்கினால் முட்டையொன்றை 42 ரூபாவுக்கு வழங்கலாம்

வரிச்சலுகை வழங்கினால் முட்டையொன்றை 42 ரூபாவுக்கு வழங்கலாம்

கோழிப்பண்ணை தொழில்துறைக்கு வரிச்சலுகை வழங்கினால் முட்டை ஒன்றை 42 ரூபாவுக்கு வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நீக்கி இத்தொழில் தொடர்பில் வரிச்சலுகை வழங்கினால் புத்தாண்டு முதல் முட்டை தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முட்டை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக பலர் தொழிலில் இருந்து விலகியுள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதால் இத்தொழிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles