இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த தகவலை ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வதற்கான உரிமங்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், இலங்கையில் உள்ள எரிபொருள் சந்தையில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதன் ஊடாக தமது விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும்.
அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் உரிமம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.