சுற்றறிக்கைகளுக்கு மாறாக லங்கா சதொச லிமிடெட் ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டு 7 கோடியே 46 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக போனஸ் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நிறுவன ஊழியர்களுக்கு போனஸாக வழங்கப்பட வேண்டிய தொகை 3,000 ரூபாவாக இருந்த போதிலும், திறைசேரியின் அங்கீகாரம் இன்றி தலா 25,000 ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2, 2003 திகதியிட்ட பொது வணிகச் சுற்றறிக்கை எண். 12 இன் 6.5 இன் படி, போனஸ் செலுத்தும் திகதியில் ஆண்டு நிதிநிலை அறிக்கைகள் தணிக்கையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இந்த போனஸ் சுற்றறிக்கைகளுக்கு மாறாக வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு, இது குறித்த அறிக்கைகள் ஒரு வருடம் மற்றும் 6 மாதங்கள் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.