Tuesday, May 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏழு நட்சத்திர சொகுசு கப்பல் இலங்கை வந்தது

ஏழு நட்சத்திர சொகுசு கப்பல் இலங்கை வந்தது

437 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு Sea Bone Encore என்ற ஏழு நட்சத்திர சொகுசுக் கப்பல் இன்று (27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து காலி துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலின் பணியாளர்கள் 437 பேர். இந்த கப்பலில் வந்த பயணிகளில் 350 பேர் இன்று பின்னவல மற்றும் இங்கிரிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பலில் 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ள நிலையில், இந்தக் கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles