Sunday, November 2, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலகின் அதி நவீன விமானமொன்று இலங்கை வந்தது

உலகின் அதி நவீன விமானமொன்று இலங்கை வந்தது

உலகின் புதிய பயணிகள் விமானம் இன்று காலை முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

சிங்கப்பூர் எயார்லைன்ஸின் போயிங் 787-10 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்க போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் ட்ரீம்லைனர் விமானப் பிரிவின் கீழ் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம், ஒரே நேரத்தில் 337 பயணிகள் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 36 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 301 சாதாரண வகுப்பு இருக்கைகள் உள்ளன.

இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக ஓடுபாதை மற்றும் விமானங்களை நிறுத்தும் தளத்தின் சிறப்பு வசதிகளை விரிவுபடுத்தவும் விமான நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles