பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் கைத்தொழில் அமைச்சு ஆகியன கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.
தற்போதைய பேச்சுவார்த்தையின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த நான்கு மாதங்களில் நீக்கப்படும் என்றும், ஆனால் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் அப்படியே இருக்கும் என்றும் நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது எவ்வகையான பொருட்கள் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குமாறு இறக்குமதியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
#Aruna