Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுத்தத்தால் பிரிந்த தம்பதி 33 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்தனர்

யுத்தத்தால் பிரிந்த தம்பதி 33 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்தனர்

திருகோணமலையைச் சேர்ந்த தம்பதி யுத்தம் காரணமாக பிரிந்து சென்ற நிலையில் 33 வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலை கொண்டு வைத்தியசாலை ஊழியர்கள் அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை கண்டுபிடித்துள்ளனர்.

போர்ச்சூழலில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமது குழந்தைகளை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு குழந்தையுடன் குடும்பத்தை விட்டு பிரிந்து கொழும்புக்கு அவர் வந்துள்ளார்.

அன்றிலிருந்து 33 ஆண்டுகளாக விகாரைகள், தேவாலயங்கள், பொது இடங்களில் பலதரப்பட்டவர்களின் உதவியால் அவர் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் அவருடன் வந்த குழந்தை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles