இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான குற்றவியல் வழக்கின் தீர்ப்பை அடுத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய பிரதமருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நேற்றைய தினம் இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இன்றைய தினம் நீக்கப்பட்டார்.
புவனேஷ் மோடி என்ற பெயரிலான குஜராத் அமைச்சர் போன்றே, சகல மோடிகளும் திருடர்கள் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தமைக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.