அண்மையில் மீனகயா ரயில் மலசலகூடத்திலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாயும் தந்தையும் திருமணம் செய்துகொண்டதாக கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (24) தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட தனது கைப்பேசியை ஒப்படைக்குமாறு கோரி கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் குழந்தையின் தந்தை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இருவரும் கடந்த 18ஆம் திகதி திருமணம் செய்துகொண்டதாகவும், பிள்ளையும் மனைவியும் கொஸ்ஸின்ன பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் குழந்தையின் தந்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.