பொலொன்னறுவை – ஹபரண பிரதான வீதியில் பட்டுஓய பிரதேசத்தில் இன்று (24) வேன் மற்றும் ஜீப்பொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான வேன் கொழும்பிலிருந்து ஏறாவூர் நோக்கியும், ஜீப் வண்டி பொலொன்னறுவையிலிருந்து ஹபரண நோக்கியும் பயணிக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேனில் பயணித்தோரே காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.