டெங்கு நுண்ணுயிர் என்டிஜென் பரிசோதனைகள் மற்றும் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனைகளுக்காக அதிக கட்டணம் வசூலித்த எட்டு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு 5.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக புதுக்கடை மற்றும் நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பின் பிரகாரம் இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
டெங்கு என்டிஜென் பரிசோதனைக்கான அதிகபட்ச விலை 1,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், டெங்கு நுண்ணுயிர் எதிர்ப்பி பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ரூ.3,000 வரை கட்டணம் வசூலித்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
முழுமையான இரத்த எண்ணிக்கைப் பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 1,000 ரூபா வரை அறவிடப்படும் அதேவேளை அதிகபட்ச விலை 400 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, டெங்கு நுண்ணுயிர் என்டிஜென் பரிசோதனைகள் மற்றும் முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்த 10 நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தொடர்ந்து சோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.