எதிர்வரும் 7 ஆண்டுகளில் இந்தியாவில் 6G சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதற்கான சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
2030க்குள் 6G சேவையை இந்தியா முழுவதும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
டெல்லியில் புதிய சர்வதேச தொலைதொடர்பு யூனியன் பகுதி அலுவலகம் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.