ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகொட பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் அமைந்துள்ள நீர் வடிந்தோடும் வடிகானிலிருந்து 10 மற்றும் 8 வயதுடைய இரு சிறுவர்கள் நேற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இவர்களில் 8 வயதுடைய சிறுவனின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதுடன், 10 வயதுடைய சிறுவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
உயிரிழந்த சிறுவர்கள் இருவரும் போகொட வித்தியாலயத்தில் தரம் 5 மற்றும் தரம் 2 இல் கல்வி கற்கும் சகோதரர்கள் ஆவர்.
சிறுவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.