எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
பல இடங்களில் வரிசையில் நின்றவர்களை அவ்விடத்தை விட்டு வெளியேற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இனி எண்ணெய் வரிசைகள் இல்லை என்பதை வெளிகாட்டும் நோக்கில் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் காத்திருப்பவர்களை வெளியேற்றுமாறு அரசாங்கம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நாம் காவல்துறை ஊடகப் அலுவலகத்தில் வினவினோம்.
எந்தவொரு காவல் நிலையத்திற்கும் இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமக்கு அறியப்படுத்தவில்லை என ஊடகப் பேச்சாளர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.