மருந்துகளின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
மருந்துப் பொருட்களின் விலையை அதிகரிப்பு குறித்த தீர்மானத்தை இன்று (31) அல்லது நாளை (01) அறிவிக்க முடியும் என மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
டொலர் நெருக்கடியால் அரச ஆய்வகங்களில் சோதனைகளை மட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மற்றும் இதய நோயாளிகளுக்கு வழங்கப்படும் இரண்டு அத்தியாவசிய மருந்துகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்திக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.