Saturday, July 19, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெலிகொம் நிறுவனம் விற்கப்பட்டால் 3,000 ஊழியர்கள் வேலையிழப்பர்

டெலிகொம் நிறுவனம் விற்கப்பட்டால் 3,000 ஊழியர்கள் வேலையிழப்பர்

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டால், சுமார் மூவாயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகளை இணையத்தளத்தில் மேற்கொள்ள முடியும் எனவும், இவற்றில் சில சேவைகளை தற்போது தமது நிறுவனஊழியர்களே செய்து வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஹேமந்த நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

எனினும், தொலைத்தொடர்பு நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி, ஒன்லைன் முறையின் மூலம் சேவைகளை வழங்குவார்கள் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.

அப்படி நடந்தால் தற்போது பணியில் இருக்கும் மூவாயிரம் ஊழியர்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles