Saturday, April 25, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிபத்தில் படுகாயமடைந்த சிறுமி பலி

விபத்தில் படுகாயமடைந்த சிறுமி பலி

ஹட்டன்- அவிசாவளை வீதியில் கித்துல்கல இங்கிரியாவத்தை எனுமிடத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து வயதான சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர், கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினத்தன்று மாலை 3.20 மணியளவில் தாய், தந்தை மற்றும் மேற்படி சிறுமி ஆகியோர் முச்சக்கர வண்டியில் செல்லும் போது, எதிர் திசையில் பயணித்த வேனொன்று மோதியதில் விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த சிறுமி, கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அன்றிரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தாய் கர்ப்பிணி என்றும் அவருடைய கருவும் கலைந்துவிட்டதால் அந்த பெண்ணின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக அறியமுடிகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கித்துல்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles