Thursday, March 26, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைகளை துண்டாக்கியவரை தேடி விசாரணை

கைகளை துண்டாக்கியவரை தேடி விசாரணை

மொரட்டுவ – கொரலவெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவரின் கைகளை வெட்டிவிட்டு, அந்தக் கைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை கைதுசெய்ய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (21) இரவு 40 வயதுடைய குறித்த நபர் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் அவரது கைகளைத் துண்டித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles