Wednesday, March 19, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேக நபருக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேக நபருக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சாட்சியாக கருதப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜஸ்மினை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல வாகனத்தில் ஏற்றிச் சென்றார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்த பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாகூர்த்தம்பி அபூபக்கர் என்ற அதிகாரி புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான தகவலைத் தெரிந்தும், அதனை மறைத்தமை தொடர்பிலும், அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, அவர் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணையின்போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles