Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுரைச்சோலை அனல்மின் நிலையம் தொடர்பான அறிவிப்பு

நுரைச்சோலை அனல்மின் நிலையம் தொடர்பான அறிவிப்பு

நுரைச்சோலை அனல்மின்நிலையத்தில் பழுதடைந்துள்ள மூன்றாவது மின் பிறப்பாக்கியை மீள ஆரம்பிக்க சுமார் 12 நாட்கள் ஆகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இயந்திரத்தின் கொதிகலனில் உள்ள நீர் குழாய் உடைந்துள்ளதாக அதன் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

அதிக வெப்பத்தால் இயந்திரத்தை பழுது பார்க்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் கூறினார்.

மூன்றாவது ஜெனரேட்டரின் பராமரிப்பு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மின்சார சபைக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதனால் மின்வெட்டு அமுலாகாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles