Thursday, June 25, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி விபத்தில் 5 வயது சிறுமி பலி

முச்சக்கர வண்டி விபத்தில் 5 வயது சிறுமி பலி

கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் இங்கிரியாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றும் வேன் ஒன்றும் மோதுண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி, கர்ப்பிணிப் பெண், மற்றும் அவரின் மகள் ஆகிய மூவரும் காயமடைந்த நிலையில் தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கரவநெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட மூவரில் ஐந்து வயதுடைய சிறுமி கரவநெல்ல வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles