ஹம்பாந்தோட்டை ரிதியகம சஃபாரி பூங்காவில் இருந்த ‘கேசர’ என்ற சிங்கம் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நியுமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கால்நடை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும்இ சிங்கத்தின் திசு மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.
கேசர என்ற சிங்கம் தனது நான்கரை வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கேசர பிறக்கும்போது உடல் நலம் குன்றியிருந்ததால், சஃபாரி பூங்கா ஊழியர்கள் அவருக்கு பாலூட்டி வளர்த்துள்ளதுடன், பின்னர் அது ஆரோக்கியமாக இருந்துள்ளது.
ரிதியகம சஃபாரி பூங்காவில் கேசரவுடன் இருபது சிங்கங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை குட்டிகள் ஆகும்.