Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு12 இந்திய மீனவர்கள் கடுமையான நிபந்தனைகளுடன் விடுதலை

12 இந்திய மீனவர்கள் கடுமையான நிபந்தனைகளுடன் விடுதலை

12 இந்திய மீனவர்கள் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 12 இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு யாழ்.பேதுருதுடுவ நீதிமன்ற நீதிவான் பொன்னத்துரை கிருஷாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மீனவர்களை ஒன்றரை வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையின் கீழ் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 12ஆம் திகதி 12 மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று வடமாகாண கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் கடற்படையினரின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஊடாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles