நாட்டின் சனத்தொகையில் ஏறக்குறைய 50% பேர் சில வாய் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல் மருத்துவ சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்தார்.
தேசிய வாய் சுகாதார சனத்தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கை மக்களிடையே பல் சிதைவு மிகவும் பொதுவான நோயாகும்.
மேலும் வாய் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் மூவர் உயிரிழப்பதாக மருத்துவர் வலியுறுத்தினார்.