Wednesday, November 20, 2024
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5000 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி

5000 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் என்ற விவேகானந்தனூர் சதீஸ் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக அவர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் .

அவருக்கு 2023 பெப்ரவரி – 01 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய சதீஸ்குமார் ஏற்கனவே உயர் நீதிமன்றில் செய்யப்பட்டிருந்த மேல் முறையீட்டு மனுவினை மீளப் பெற்றுக்கொள்வதற்கான தனது ஒப்புறுதியினை பெப்ரவரி-23 அன்று சட்டத்தரணிக்கூடாக மன்றுக்கு சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்தே மேல் முறையீட்டு மனுவினை மீளளித்த உயர்நீதிமன்றம் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது.

இந்தநிலையில் தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் இன்றைய தினம் கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles