மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வட்சப் செயலி, குரல் பதிவுகளை அனுப்புவதில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி
அனுப்பப்பட்ட குரல்பதிவை வட்சப்புக்கு வெளியில் ப்லேய் செய்ய முடியும். (குரலை கேட்டுக் கொண்டே வேறு செயற்பாடுகளை புரியலாம்)
நிறுத்தி வைத்தல் மற்றும் மீள ஒலிக்கச் செய்தல் (ஒலிப்பதிவு செய்யும் போது, இடையில் நிறுத்தி மீண்டும் அதே இடத்தில் இருந்து ஒலிப்பதிவு செய்யலாம்)
அலை வடிவம் – ஒலிப்பதிவின் அலை வடிவத்தை காண முடியும்.
ஒலி வரைவு – ஒலிப்பதிவை அனுப்புவதற்கு முன்னர், ஒலிக்கச் செய்து கேட்டு அனுப்பலாம்.
குரல் பதிவை கேட்டு இடைநிறுத்தி பின்னர் மீண்டும் அதே இடத்தில் இருந்து கேட்கக்கூடிய வசதி.
வேகமாக ஒலிக்கச் செய்து விரைவாக கேட்கலாம்.
மேலும், வட்சப்மூலும் நாளாந்தம் 7 பில்லியன் குரல் பதிவுகள் பரிமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.