Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுவரி வருவாய் 12% ஆல் வீழ்ச்சி

மதுவரி வருவாய் 12% ஆல் வீழ்ச்சி

கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மதுவரி வருமானம் 12.2% ஆல் குறைந்துள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மதுவரி வருமானம் 28.6 பில்லியன் ரூபாவாகும்.

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் அந்த வருமானம் 25.1 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மதுபானத்திற்கு விதிக்கப்பட்ட வரி 20மூ அதிகரிக்கப்பட்டதால், மதுபானத்தின் விலை உயர்வு காரணமாக நுகர்வு குறைந்துள்ளது.

இதன் காரணமாக, மது விற்பனை குறைந்துள்ளதால், மதுவரி வருவாய் குறைந்துள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles