Wednesday, November 20, 2024
27.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிவனொளிபாத மலையடிவாரத்தில் லிஸ்டீரியா நோயால் பெண் உயிரிழப்பு உறுதி

சிவனொளிபாத மலையடிவாரத்தில் லிஸ்டீரியா நோயால் பெண் உயிரிழப்பு உறுதி

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா (Listeria) நோயால் உயிரிழந்தமை சுகாதாரத்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் லிஸ்டீரியா நோயால் பீடிக்கப்பட்டு, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவருக்கு லிஸ்டீரியா நோய் தொற்றியுள்ளமை, ஆரம்ப பரிசோதனைகளில் உறுதியானதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்ததாக, சமூக வலைதளங்களில் வெளியான தகவலை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தவில்லை என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ முன்னதாக தெரிவித்திருந்தார்.

சிவனொளிபாதமலை வனப்பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவரும், யாத்திரையில் ஈடுபட்டிருந்த சிறுமி ஒருவரும், வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்ததாக குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த சப்ரகமுவ மாகாண ஆளநர் டிகிரி கொப்பேகடுவ, இந்தச் சம்பவம் சிவனொளிபாதமலைக்கான பிரதான பாதையான நல்லதண்ணி பாதையில் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு பாதையில் உள்ள சிறிய கடை ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆய்வுகள் மற்றும் விசாரணை நிறைவுபெறும் வரையில், எந்தத் தகவலையும் வெளியிட முடியாது என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles