செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி டொலரை 200 ரூபாவாக கொண்டு வருவார்- வஜிர அபேவர்தன

ஜனாதிபதி டொலரை 200 ரூபாவாக கொண்டு வருவார்- வஜிர அபேவர்தன

அடுத்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதியை 200 ரூபாவாக கொண்டுவர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் காலை இழுக்காமல் ஆதரித்தால் பிரச்சினைகளை தீர்த்து மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டைக் கட்டியெழுப்புவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் நாட்டு மக்கள் தேர்தலுக்குத் தயாராக இல்லை எனவும் அரசியல்வாதிகள் தான் தேர்தலைக் கேட்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி அரசாங்க கொடுப்பனவு பெறும் எண்ணாயிரம் பேரை நியமிப்பது இந்த நேரத்தில் நாட்டுக்கு சுமை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles