Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் இதனை குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவையூடாக பலர் நன்மையடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவையை விஸ்தரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ்பாணம் – கொழும்பு விமானச் சேவை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்றும் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles