Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டா - குடு சலிந்துவை தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி

ஹரக் கட்டா – குடு சலிந்துவை தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பிரபல பாதாள உலக குற்றவாளிகளான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன மற்றும் குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷித குணரத்ன ஆகிய இருவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிகமவைச் சேர்ந்த 32 வயதான நதுன் சிந்தக மற்றும் 27 வயதான சலிந்து மல்ஷித ஆகியோர் அண்மையில் மடகஸ்காரில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக ஏஎஸ்பி தலைமையிலான சிஐடி குழு சனிக்கிழமை மடகஸ்காருக்கு புறப்பட்டது.

மடகஸ்காரின் பாதுகாப்பு அதிகாரிகள் மார்ச் முதலாம் திகதி அன்று மடகஸ்காரில் உள்ள இவாடோ சர்வதேச விமான நிலையத்தில் ஹரக் கட்டா மற்றும் குடு சலிடு உட்பட 8 பேரை கைது செய்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles