நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப்பெற கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் அல் ராட் அல் ஹுஸைன், இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மக்களுக்கு அசௌகரித்தை ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு நேற்றுமுன்தினம் அழைக்கப்பட்டது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நீதிமன்றில் முன்னிலையாகாமையால், அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவர் நேற்று மனு ஒன்றின் மூலம் நீதிமன்றில் முன்னிலையாகிய நிலையில், அவருக்கு எதிரான பிடியாணையை மீளப்பெற கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.