Monday, August 4, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் - அரச பேருந்து, ரயில் சேவை உள்ளிட்ட துறைகள் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்காது

தனியார் – அரச பேருந்து, ரயில் சேவை உள்ளிட்ட துறைகள் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்காது

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பிற்கு தனியார், அரச பேருந்து மற்றும் ரயில் சேவை உள்ளிட்ட துறைகளின் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளன.

எனினும் ரயில் இயக்கப் பணிகளில் பங்கேற்பதில்லையென லோகோமோடிவ் ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யூ. கொன்தசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், அத்தியாவசிய பொதுமக்கள் சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரயில் சேவையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் நேற்று முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், ரயில் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் முன்னெடுக்கப்படுகின்ற பணிப்புறக்கணிப்புக்கு, 5 சங்கங்கள் ஆதரவளிக்காது என இலங்கை போக்குவரத்துச் சபையின் பொதுப் போக்குவத்து சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம், சுமார் 13 ஆயிரம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles