இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அபராதம் விதிக்க லண்டன் பொலிஸார் தயாராகி வருகின்றனர்.
அண்மையில், பிரதமர் ரிஷி சுனக், தனது பாதுகாப்புப் பணியாளர்களுடன், மனைவி அக்ஷதா மூர்த்தி, மகள்கள் மற்றும் செல்லப் பிராணியான நோவாவுடன் லண்டன் ஹைட் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
ஹைட் பார்க் சட்டத்தின் படி, நாய்களை பூங்காவிற்குள் கொண்டு வந்தால், உரிமையாளர் அதனை சங்கிலி அல்லது கயிற்றில் கட்டி வைத்திருக்க வேண்டும். பூங்காவில் உள்ள வனவிலங்குகள் நாய்களால் துன்புறுத்தப்படலாம் என்பதால் இதைச் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.
இருப்பினும், சுனக் குடும்பத்தினர் தங்கள் நாயை சங்கிலியில் கட்டி பூங்காவுக்கு கொண்டு வரவில்லை.
பூங்காவில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பிரதமரை அணுகி இதுபற்றி அறிவித்ததுடன், குற்றத்துக்கான அபராதத்தை பிரதமர் செலுத்த வேண்டும் என்றார்.
சில மாதங்களுக்கு முன்பு, பிரதமர் ரிஷி சுனக் லண்டன் பொலிஸாரால் அபராதம் விதிக்கப்பட்டார். சில நொடிகள் சீட் பெல்ட் அணியாமல் காரின் பின் இருக்கையில் அமர்ந்து கைப்பேசியில் வீடியோ எடுத்ததால் இந்த அபராதம் செலுத்த நேரிட்டது.
#NDTV