Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டா - குடு சலிந்து ஆகியோர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

ஹரக் கட்டா – குடு சலிந்து ஆகியோர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

மடகஸ்காரில் கைது செய்யப்பட்ட ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக மற்றும் ‘குடு சலிந்து’ என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷிக ஆகியோர் இன்று (15) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்காருக்குச் சென்றதுடன், அவர்கள் கென்யா மற்றும் இந்தியா ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ ஆகியோருடன் மேலும் ஆறு பேர் அந்த குழுவில் உள்ளதுடன், ஹரக் கட்டாவின் மனைவி என்று கூறப்படும் வெளிநாட்டு பெண்ணும் அதில் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

இக்குழுவினர் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும், இது தொடர்பில் மடகஸ்கார் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles