வெலிமடையில் இருந்து இன்று (14) காலை நீதிமன்றத்திற்கு சாட்சி வழங்க சென்ற ஒருவர் நீதிமன்றத்தின் நுழைவாயில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கம்பளையில் இருந்து வெலிமடை நீதிமன்றத்திற்கு சென்ற 62 வயதான ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.