வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று இன்று அவதானிக்கப்பட்டது.
தகவலறிந்த வல்வெட்டித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அந்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.