சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறுவது இலங்கைக்கு தற்காலிக நிவாரணமே தவிர நிரந்தர நிவாரணம் அல்ல என அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்க் தெரிவித்துள்ளார்.
நேற்று (12) சிஎன்பிசியில் செய்திச் சேவையில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1965 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்றிருந்த போதிலும், சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் தோல்வியடைந்து ஒரு நாடாக அவற்றை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதாரம் தொடர்பில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மாற்றமின்றி தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.