கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து 50 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரிடமிருந்தும் 4.9 கிலோகிராம் அளவிலான ஐஸ் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் 41 மற்றும் 43 வயதுகளையுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.