யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் சுடலை ஒன்று புதிதாக அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
நாகர்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ஏற்கனவே சுடலைகள் இருக்கின்ற போதும் குடும்ப சுடலை ஒன்று தனிநபரால் அமைக்கும் முயற்சிக்கே மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டினால் ஒருவருக்கு கையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று மாலை 7:45 மணியளவில் சம்பவ இடத்திற்க்கு சென்ற பருத்தித்துறை பொலிசார் அங்கு இரவு கரப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டவர்கள், அங்கு கூடியிருந்தவர்கள் மீது கொட்டான் மற்றும் கற்களால் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.
,e;j தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் நாகர்கோவில் முருகன் ஆலய சப்பற கொட்டகையும் தீப்பற்றி எரிந்துள்ளது.
உடனடியாக செயற்பட்ட மக்கள் இரண்டு பக்க கிடுகு கூரையும் எரிந்த நிலையில் சப்பறத்திற்கு எந்த சேதமும் இல்லாது பாதுகாத்துள்ளனர்.

