மருத்துவ மாணவர்களுக்கான மருத்துவப் பயிற்சிகளை வழங்கக்கூடிய அரச வைத்தியசாலைகளை அடையாளம் காண குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகிய தனியார் மருத்துவ மாணவர்களுக்கு அரச போதனா வைத்தியசாலைகளில் மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.