Thursday, November 27, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை

எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை

கனிம எண்ணெய் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகள் இலங்கையின் தேவைக்காக எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள முறைமைக்கு அமைவாக தமது அமைப்பு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்த சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள், ஹம்பாந்தோட்டையில் அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய முதன்மை எரிசக்தி மையத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான முழு முதலீட்டையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்தின் பின்னர் விரைவான அபிவிருத்தியை இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles