யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவான மரக்கறிகள் கொண்டு வரப்படுவதால் மரக்கறி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இருந்து 60,000 கிலோகிராம் மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார நிலையத்திற்கு கிடைத்துள்ளன .
தம்புள்ளை விசேட பொருளாதார நிலையத்தின் மரக்கறி இருப்புக்கள் நேற்று (13) பின்வருமாறு பதிவாகியுள்ளன.
இதன்படி, ஒரு கிலோ பீன்ஸ் மொத்த விற்பனை விலை 150 ரூபாவாகவும், லீக்ஸ் 150 ரூபாவாகவும், கரட் 100 ரூபாவாகவும், தக்காளி 130 ரூபாவாகவும், முள்ளங்கி 40 ரூபாவாகவும், முட்டைக்கோஸ் 70 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு (யாழ்ப்பாணம்) 140 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு (நுவரெலியா) 200 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.